அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவரும், சித்பவானந்தர் சேவா சங்கத்தின் தீவிர உறுப்பினரும், வித்யாவன பழைய மாணவருமான டாக்டர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் இன்று(29.05.2011, ஞாயிறு) மதியம் கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
Sunday, May 29, 2011
*WIT AND HUMOUR OF CHINNU
A Swamiji in Belur Mutt was bringing up a dog. He was fond of it. The pet dog is used to be kept tied to a post near Mahapurushji’s dwelling place. Because of its urination etc, the place was smelling foul. Chinnu, therefore, removed it from the path and tied it to a distant pillar. The Swamiji who was bringing it up got annoyed and shouted at Chinnu saying, “You know, Chinnu, that dog is being brought up by me. Why have you changed its place?” “Swamiji! The Chinnu dog (pointing himself) is being brought up by Mahapurush Maharaj. So this dog (Chinnu) has driven away that dog to a distant place to provide peace to his Master”.
Friday, May 27, 2011
*2010-11-ஆம் ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்ச்சி
நமது குருகுல உயர்நிலைப் பள்ளி வழக்கம் போல் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
3 மாணவர்கள் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். அறிவியல் பாடத்தில் ஐவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் மூவரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
3 மாணவர்கள் 500க்கு 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். அறிவியல் பாடத்தில் ஐவர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் மூவரும், சமூக அறிவியலில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
Thursday, May 26, 2011
*ஏழைகளுக்கு இரங்கும் இதயம்!
தபோவனத்து சந்நியாசி ஒருவர் தமது அனுபவத்தை கூறியது:
"தபோவனத்துக்குச் சொந்தமான படுகை நிலத்தில் நெல் விளைந்து அறுவடை செய்து 500 நெல் மூட்டைகள் களத்தில் இருந்தன. திடீரென்று காவிரியில் வெள்ளப்பெருக்கெடுத்து மிக விரைவில் படுகைக்குள் புகுந்துவிட்டது. நெல் மூட்டைகளை எல்லாம் களஞ்சியத்துக்குள் வைத்து நீர் புகாதவாறு அதன் வாயிலையும் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேலை முடிவதற்குள் வெள்ளம் அளவுக்கு மீறி வந்துவிட்டது. நானும், ஆட்களும் நீந்தி கரை சேர்ந்தோம். பள்ளியிலிருந்த மேஜை, நாற்காலிகளெல்லாம் வெள்ளத்தில் மிதந்து சென்றன. நெல் மூட்டைகளை மட்டும் அந்த வெள்ளப் பெருக்கு விட்டு வைத்துச் செல்லுமா? சுமார் 600 மூட்டைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீணாயின. இவ்வளவு நாட்களாகப் பாடுபட்டுச் சேகரித்த நெல் ஒரு நொடியில் வெள்ளத்தால் பாழாய்விட்டதே என்று என் மனம் வேதனை அடைந்தது. இதே நிகழ்ச்சி நான் குடும்பத்தில் இருந்தபோது ஏற்பட்டிருந்தால் இறந்தே போயிருப்பேன். என் மன ஆறுதலுக்காக இந்நிகழ்ச்சியை இவரிடம் கூற வந்தேன். இந்த வெள்ளம் திருப்பராய்த்துறையைச் சுற்றியுள்ள ஐந்தாறு கிராமங்களில் புகுந்து அந்த கிராம மக்கள் சுமார் 2000 பேர் திருப்பராய்த்துறை கோயிலில் வந்து அடைக்கலம் புகுந்திருந்தார்கள். படுகை நெல்லுக்கும் பள்ளிச் சாமான்களும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைப் பெருந்துன்பத்துடன் இவரிடம் கூறி இவ்வளவு நஷ்டமாகப் போய்விட்டதே என்று வருந்தினேன். அதற்கு சுவாமிஜி 'படுகை நெல் போனது உனக்குப் பெருநஷ்டமாகப்போய்விட்டதா? ஏழை மக்கள் 2000 பேருக்குமேல் வீடு, வாசல்களை இழந்து உணவுக்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். அவர்களைப்பற்றி நீ சிந்திக்கவே இல்லை. இப்போது கள்ஞ்சியத்தில் எவ்வளவு அரிசி மிச்சமிருக்கிறது? இருக்கிற அரிசியைச் சமைத்துக் கோயிலில் த்ங்கியுள்ள மக்களுக்குக் கொடுக்க முதலில் ஏற்பாடு செய்' எனக் கட்டளை இட்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பரந்த உள்ளமும் ஏழைகளுக்கு இரங்கும் இதயமும் பெற்றிருந்தார் என்பது வெளிப்படையன்றோ!"

Wednesday, May 25, 2011
*சொல் வன்மை
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்"
எனத் திருவள்ளுவர் சொல் வன்மை பற்றிக் கூறுகிறார்.
இந்த குறளுக்கு விளக்கமாக ஸ்ரீமத் சித்பவானந்தரின் பேச்சாற்றல் அமைந்திருந்தது. இவருடைய பேச்சாற்றலை நேரில் கண்டு அனுபவித்த சந்நியாசினி ஒருவர் கூறுவதாவது: " சுவாமிஜியுடன் நாங்கள் சிலர் கேரள நாட்டுக்குப் பயணம் சென்றிருந்தோம். அங்குள்ள பக்தர் சிலரின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். பக்தர்கள் இவரை வரவேற்பதில் பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் காட்டினார்கள். அவர்களின் பக்தி எத்தகையதாக இருந்தது என்பதை நேரில் கண்டு அனுபவித்தோம். அங்கிருந்து நாகர்கோயில் சென்றிருந்தோம். அங்கு ஒரு கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரை அழைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றவுடன் கல்லூரி நிர்வாகி இவரிடம் 'உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஆர்வமுடையவர்களாக இருக்கிறோம். உங்களுடைய பேச்சு மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படும் என்று நினைத்துத் தங்களை அழைத்தோம். ஆனால் மாணாக்கர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பாங்கில் இருக்கின்றார்கள். ஒரு வேளை கலவரத்தை உண்டுபண்ணிவிடுவார்களோ என்று அஞ்சுகின்றோம். தாங்கள் மாணவர்களுடைய நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு பேச வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.' என்று சொன்னார்கள். சுவாமிஜி அதற்கு 'அப்படியா?' என்று கூறிச் சிரித்துக்கொண்டார். கம்பீரமாக மேடையின் மீது நின்று ஆற்றல், அன்பு, அறிவு என்பனவற்றை விளக்கும் விதமாக ஒரு மணி நேரம் உணர்வோடு கூடிய அறவுரை ஆற்றினார். கடவுளைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. இவர் ஆரம்பிக்கும்பொழுது மாணாக்க மாணாக்கியர் சிலர் மன்றத்தின் உள்ளேயும் சிலர் வெளியே உள்ள மரத்தின் மேலேயும் அமர்ந்திருந்தார்கள். பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்த மாணவ மாணவிகள் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து மன்றத்தினுள் அமைதியாக அமர்ந்து சொற்பொழிவை மிக்க ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவு முடிந்த பிறகு நிர்வாகியும் கல்லூரி முதல்வரும், 'தங்கள் பேச்சை மாணவர்கள் ஆழ்ந்து கேட்டனர். தாங்கள் அடிக்கடி வந்து இங்கு பேச வேண்டும்' என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் எங்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அவசியம் சுவாமிஜியை அழைத்து வரவேண்டும் என்னும் கருத்தை தெரிவித்துக்கொண்டார்கள். சுவாமிஜியுடைய பேச்சைக் கேட்டதும் மாணவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியதைப் பார்த்தோம்".
Subscribe to:
Posts (Atom)