மே மாதம் 8ஆம் தேதி அன்று தினமணி நாளிதழில் அர்ஜுன் சம்பத் அவர்கள் எழுதிய தலையங்கம் பக்கத்திலிருந்து சிறு துளி....
இராமகிருஷ்ண தபோவனத்தின்
தலைவர் நித்யானந்தா என்கிற சுவாமிஜி தனது 82 வயதில் இறை நிலை எய்தி இருக்கிறார்.
விவேகானந்தர் நமக்களித்த தேசிய லட்சியங்களாகிய துறவு தொண்டு என்கிற விஷயங்களுக்கு
உதாரணமாக வாழ்ந்தவர். திருப்பராய்த்துறை தபோவனத்தை தோற்றுவித்த சுவாமி சித்பவானந்தரை
குருவாக ஏற்றுக்கொண்டு துறவு நிலையை மாணவப் பருவத்திலேயே விரும்பியவர். சித்பவானந்தர்
சமாதியான பிறகு தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தபோது மறுத்தார். தன்னைவிட மூத்த
சன்னியாசியான குஹானந்தரைத் தலைவராக்கினார். அதற்குப் பின் தலைமைப் பொறுப்பை
ஏற்றார். தனது ஓயாத உழைப்பாலும், உறுதியாலும் தபோவன கல்வி நிறுவனங்களையும், தொண்டு
நிறுவனங்களையும் மேன்மேலும் வளர்த்தார்.
சித்பவானந்தரின் அந்தர்யோக வகுப்புகளைத்
தமிழகமெங்கும் பரப்பினார். மாணவர்களைச் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கசீலர்களாக
உருவாக்கினார். கடந்த 9ஆம் தேதி(ஏப்ரல்) இறை நிலை எய்தினார். ஒரு துறவி எப்படி வாழ
வேண்டும் என்பதற்கு உதாரணம் தபோவன சுவாமி நித்யானந்தா.
You can also Comment here: www.facebook.com/SwamiChidbhavananda