Friday, October 19, 2012

*Obituary


Our former Headmaster of SVVHS Sri V. Somasundaram passed away this morning(19.10.2012) @ Vayalur. Let His soul rest in peace in the lotus feet of Swami Chidbhavananda.

1 comment:

  1. பழைய மாணவர் ஒருவர் எங்களுக்கு அனுப்பி இரங்கல் மடலை மறுமொழியாக இங்கு பதிவேற்றுகிறோம்...

    அன்புள்ள ஐயா
    நம் முன்னாள் தலைமையாசிரியர் திரு சோமசுந்தரம் அவர்களின் இந்த வருத்தமான செய்தியைக் கேட்டு நோகிறது.

    அவர் தோற்றமும் தலைமையும் மறக்காது. அவருடைய செவ்வியான சாய்வான ஆங்கிலக்கையெழுத்தும் யார்க்கும் கண்ணைவிட்டு அகலாது.

    அவர் என்னுடைய கொட்டைக்கையெழுத்தை எப்படிப் பொறுமையாக நோன்றார் என்று தெரியவில்லை!

    அவர் இருப்பதுபற்றித் தாங்கள் 2011-இலே நான் தமிழ்நாடு வந்தபொழுது அருள்கூர்ந்து சொல்லியிருந்தால் அவரைக் கட்டாயம் பார்த்திருப்பேன்.

    வயலூர்க்கோவிலுக்கும் வேறே நான் போயுமிருந்தேன்! பெரிய இழப்பு அவர் மறைவும் அவரைப் பார்க்கமுடியாமற் போனதுவும்.
    அவர் குடும்பத்தார்க்கு என்போன்றோரின் இரங்கலைத் தெரிவிக்கவும்.

    1970-இலே நான் சேர்ந்தபொழுது முதல் 1978-இலே நான் முடிக்கும்வரை நம் பள்ளியின் சோலைப்பொதும்பர் இடையே உலவின அவர் உருவம் மறக்காது. ஓர் ஊழியே கழிந்துவிட்டது. அவர் அண்மைவரையிலேகூட உடலைத் திண்ணமாக வைத்திருந்துள்ளது அவர் முகம் அடையாளம் மாறாமல் தோன்றுவதினின்று தெரிகிறது.

    அவர் பூதவுடல் மறைகினும் புகழுடல் மறையாது பொலியும்.

    வாழியர் திரு சோமசுந்தரம் ஐயா அவர்கள்!

    வருத்தத்துடன்
    பெரியண்ணன் சந்திரசேகரன்.
    அற்றுலான்றா, அமெரிக்கா.

    ReplyDelete