Saturday, May 21, 2011

*ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் சான்றோர் சந்திப்பு - 1

      சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்குப் போகும் சந்தர்ப்பங்ககளிலெல்லாம் திருவண்ணாமலை சென்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களையும் தரிசனம் செய்வார் சுவாமி சித்பவானந்தர். ஸ்ரீ ரமண பகவானும் இவரோடு தனிப்பட்ட முறையில் அதிக நேரம் பேசுவார். பொதுவாக ஸ்ரீ ரமண மகரிஷி மௌனமாகத்தான் இருப்பார். இவரிடம் ஸ்ரீ ரமண மகரிஷி வெகு நேரம் ஆன்மீக விஷயங்களைப் பேசுவது வழக்கம். இது மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.


ஒரு சமயம் இவர் ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்த்து நம் சுவாமிஜி கேட்டதாவது: "நீங்கள் மதுரையைவிட்டு வெளியேறும்பொழுது பெற்றிருந்த மனநிலைக்கும் இன்று நீங்கள் பெற்றுள்ள மனநிலைக்கும் என்ன வேறுபாடு காண்கிறீர்கள்?"


ஸ்ரீ ரமணர் மகரிஷி பகர்ந்ததாவது: "நான் மதுரையைவிட்டு வெளியேறும்பொழுது எந்த மனநிலையைப் பெற்றிருந்தேனோ அதே மனநிலையில்த்தான் இப்பொழுதும் இருக்கிறேன்."


சுவாமிஜி: "அங்ஙனமாயின் நீங்கள் எதற்காக இவ்வளவுகாலம் தவம் செய்தீர்கள்?"


ஸ்ரீ ரமண மகரிஷி கூறியதாவது: "நான் அன்று பெற்ற மனநிலையில் உறுதி பெற்றிருப்பதற்காகத் தவம் செய்யவேண்டியிருந்தது. அன்று பெற்றதுதான் முடிந்த நிலை. அதற்கு மேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை."

No comments:

Post a Comment