விவேகானந்தரை "பயில்வான் சுவாமி" என்பார்கள். ஆனால் நம் பெரிய சுவாமிஜியை "மிலிட்டரி ஸ்வாமிஜி" என்பார்கள். ஏன்? ராணுவத்திற்குண்டான கட்டுப்பாட்டை அவர் கடைபிடித்து வந்தார். ராணுவ வீரனிடம் எத்தகைய உடல் பலம், மனபலம், காலம் தவறாது கர்மம் ஆற்றும் பண்பு, கீழ்ப்படிதல், எதையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், அச்சமே என்னவென்று தெரியாது வளர்தல், எதையும் ஆராய்ந்து செய்தல் முதலிய பண்புகளை மாணவர்கள் தங்கள் பருவத்தில் கற்றுக்கொள்ள அவர் ஆர்வம் காட்டினார்கள். தியானப் பயிற்சி, கடவுள் வழிபாடு முதலியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கடமை, எதிலும் உயர்வு தாழ்வு காட்டுதல் கூடாது என்பது சுவாமிஜியின் கருத்து.
நம்முடைய வேலையை நாமே செய்யவேண்டும் என்பதைத் தாமே வாழ்ந்து காட்டியவர். திருப்பராய்த்துறை பள்ளியில் படித்த மாணவ என்றாலே அவனிடம் தனி முத்திரை உண்டு. நன்னடத்தை, ஹிந்து உணர்வு ததும்புவது ஆகியவை இம்மாணவர்களிடம் காணலாம். ஒவ்வொரு மாணவனும் துறவிகளின் கண்காணிப்பில் வளருகிறான். ஒவ்வொரு மாணவனும் உயர்ந்த லட்சியத்தை அடைய சுவாமிஜி அவர்கள் அமைத்த குருகுல முறை நன்கு செயல்படுகிறது. இது போன்ற தபோவன அமைப்பு நாடு முழுவதும் பரவினால்தான் இன்றைய இளைஞர்களிடம் ஒழுக்கமும், தேச பக்தியும், லட்சிய உணர்வும் மேலோங்கும்.
No comments:
Post a Comment