டாக்டர். R.K. கந்தசுவாமி,
தபோவன பழைய மாணவர்,
மற்றும் தபோவன பொதுக்குழு உறுப்பினர்.
விடுதி எண்: 43(1950 – 51)
1943-ல் ஆரம்பிக்கப்பட்ட வித்யாவன குருகுலப் பள்ளி முதன்முதலில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய மண்டபங்களில் தான் நடைபெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறமாக உள்ள சத்திரத்தில் தான் விடுதி இருந்தது. ஆரம்பத்தில் 50 மாணவர்களே விடுதியில் இருந்தனர். வரிசையாக பெட்டியும் அதன் மேல் படுக்கையையும் வைத்திருப்போம். பெட்டியின் முன்னால் அமர்ந்து படிப்போம். உறங்கும்பொழுது பெட்டியின் முன்னால் விரித்துப் படுத்துக்கொள்வோம். Tooth Brush, Soap அனுமதி கிடையாது. பெட்டியைப் பூட்டக் கூடாது; விலை உயர்ந்த பொருட்களான Watch, Camera முதலியன கூடாது.
பிறகு Hostel தற்போது உள்ள இடத்தில் கட்டப்பட்டது. அதற்குப் பின் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள Class Room கட்டிடங்கள் எல்லாம் ஹொஸ்டெல்-ல் உள்ள மாணவர்களின் உழைப்பால் செங்கல், Grider முதலியன எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து கட்டிடம் கட்டும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு கை மாறிமாறிப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். மாணவர்களின் உழைப்புக்காக அன்று இரவே வடை, பாயசத்துடன் விருந்து சமைக்கப்படும். அதனால் மாணவர்களும் உற்சாகத்துடன் ஒத்துழைத்தனர். இவ்வாறாக Dignity of Labour கற்றுத் தரப்பட்டது. பள்ளி, விடுதிக் கட்டிடங்கள் வளர வளர மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. அப்பொழுதெல்லாம் ஆற்றில் குளிப்பது என்றாலே ஒரு தனி ஆர்வம். தினமும் இரண்டு முறை குளிப்போம். சுவாமிஜி தினமும் ஒரே பாதையில் ஆற்றுக்குள் தண்ணீர் வரை, மணலில் நடந்து நடந்து ஒரு தனித் தடமே உருவாகியிருக்கும். நாங்களும் சிலர் தினமும் அவருடன் செல்வோம். குளிக்கும்பொழுது நாங்கள் 5,6 பேர் சேர்ந்து அவரை தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்துக் கொள்வோம். சிறிது நேரம் விட்டுத் திடீரென்று எங்களையெல்லாம் தள்ளிவிட்டு மேலே வந்துவிடுவார்.
No comments:
Post a Comment