ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் தேதி திருப்பராய்த்துறை தலத்தில் காவிரிக்கரையில் ‘முதல்முழுக்கு’ என்னும் துலாஸ்நானம் ஆரம்பிக்கிறது.
அந்த மாதம் முழுவதுமோ அல்லது அந்த மாதத்தில் இயன்ற நாட்களிலோ காவிரியில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. (குறிப்பு:- வரும் செவ்வாய்க்கிழமை 18.10.2011 அன்று, ஐப்பசி மாதம் முதல் நாள் திருப்பராய்த்துறை துலாஸ்நான நாளாகும்.)
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் |
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தைத் தம் திருக்கைகளில் ஏந்திக்கொண்டு, தம் குருகுலப் பிள்ளைகளுடன் காவிரிக்குச் சென்று துலா ஸ்நானம் செய்ய வைத்து அகமிகமகிழ்ந்து வந்தார். அன்று ஒரு நாள் மட்டும் குருகுலப்பிள்ளைகள் தாங்களே தனித்துச் சென்று, தாருகாவனேஸ்வரப் பெருமானைக் கண் குளிர வணங்கி மகிழ்ச்சி அடைவர். நம் பெரிய சுவாமிஜியின் காலத்துக்குப் பின்னும் இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
துலா ஸ்நான தினத்தன்று பராய்த்துறைநாதரும், பசும்பொன்மயிலாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தமாடுவர். அவ்வமயம் பக்கத்து ஊர் மக்கள் மற்றும் பக்த பெருமக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வர். அக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
திருப்பராய்த்துறை திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணி
அன்பர்களே,
1940 – ஆம் ஆண்டு மே மாதம் 26 – ஆம் தேதி திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாகிக் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். 12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.
தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.
கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்
SRI RAMAKRISHNA TAPOVANAM,
THIRUPPARAITHURAI
என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.
Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.
No comments:
Post a Comment