திருப்பராய்த்துறை கோயில் வெளிப்பிரகார அமைப்பு.
வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நதிகள் உள்ளன. மேலும் கருவறைக்கு பின்புறத்தில் பராய் மரத்துக்கு அடியிலும் ஒரு சிவலிங்கம் உள்ளது.
பராய் மரமும் சிவலிங்கமும் |
சரும நோய் உள்ளவர்கள் காவிரியில் நீராடி, ஈரத்துணியுடன் வந்து பராய்த்துறைநாதருக்கு அர்ச்சனை செய்து, வெளிப்பிரகாரத்தில் பராய் மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்தை சுற்றி வந்தால் சரும நோய் தீரும் என்பது பக்தர்களின் அனுபவம். புற்று நோயும் தீர்க்கப்படுவதாகச் சொல்கிறார்கள். அம்பாளை வேண்டிக் கொண்டால் திருமண பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகம்.
பிட்சாடனர் வேடம் பூண்டு திருவிளையாடல் புரிந்த பின், சிவபெருமான் தாருகாவன முனிவர்களுக்குக் காட்சி தந்ததாகக் கூறப்படும் புரட்டாசி மாதம் 18–ஆம் தேதி சுவாமியின் திருமேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பு அம்சமாகும். 2011ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 தேதியாகிய இன்று, புரட்டாசி மாதம் 18 ஆம் நாளாக அமைந்தது எதிர்பாராத நிகழ்வாகும்.
திருப்பராய்த்துறை திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணி
அன்பர்களே,
திருப்பராய்த்துறைக்கு, சுவாமி சித்பவானந்தர் அவர்கள் 1940 ஆம் ஆண்டு வந்த பொழுது ஸ்ரீ தாருகாவனேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வித்தார். அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். 12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.
தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.
கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்
SRI RAMAKRISHNA TAPOVANAM,
THIRUPPARAITHURAI
என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.
Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.
No comments:
Post a Comment