திரு. V. லட்சுமணசாமி
விடுதி எண்.173 (1977-78)
1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை. மதியம் நானும் என் நண்பர்களும் மாமரத்தடியில் விளையாடிக் கொண்டருந்தோம். திடீரென்று காவல்துறை ‘சைரன்’ ஒலி காதைப் பிளந்தது. மத்திய அமைச்சரும், சுவாமிஜியின் அண்ணன் மகனும், அப்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான திரு.C. சுப்ரமண்யம் பந்தோபஸ்து படை, கூட்டணிக்கட்சித் தலைவர்கள் புடைசூழ பல கார்கள், வேன்கள் சூழ விடுதிக்குள் நுழைந்தார். சுவாமிஜி மாடியிலிருந்து இந்த ஆடம்பர நுழைவை பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தமாக திரு. C.S. சுவாமிஜியைப் பார்க்க மாடிக்குச் சென்றார். சுவாமிஜி கோபத்துடன், “முதலில் உன் படைகள், பரிவாரங்கள், பந்தோபஸ்துகளை வெளியே அனுப்பிவிட்டு தனியே இங்கு வரலாம்” என்றார். உடனே திரு. C.S. கீழே வந்து அவருடன் வந்த ஜீப்கள், கார்கள், வேன்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி மனிதராக சாலையிலிருந்து நடந்து வந்து மாடிக்குச் சென்று சுவாமியிடம் ஆசி பெற்றார். முற்றும் துறந்த சுவாமிக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றே என்ற கருத்தைப் புரிந்துகொண்டேன்.
No comments:
Post a Comment