Friday, September 9, 2011

* "தாங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"

நரேந்திரநாத தத்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று “ஐயா, தாங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு பரமஹம்சர் கூறிய விடை “ஆம். இடையறாது பார்த்துக்கொண்டிருக்கிறேன். வேண்டுமானால் அவரை உனக்கும் காட்டுகிறேன்” என்று சொன்னது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதே போன்று சுவாமி சித்பவானந்தரிடம் மாணவர்கள் கேட்பதுண்டு. தபோவனச் சிறுவர்கள் சுவாமிஜியிடம் கேட்கிறார்கள், “தாங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்று. சுவாமிஜி சொல்கிறார், “நான் கடவுளைத்தானே பார்க்கிறேன்; நான் கடவுளைத்தானே பார்க்கிறேன்.” இது முதல்முறை.

இரண்டாவது முறை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தபோவன மாணவர்கள் கேட்கிறார்கள், “சாமி, நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” அதற்கு அவர் சொல்லிய பதில் சிந்திக்கத் தூண்டுகிறது. “நீங்களும் கடவுளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்; நீங்களும் கடவுளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்.” என்று சொன்னார்.

மூன்றாவது முறை. “உங்களில் யாருக்காவது அன்பு என்றால் என்ன என்று தெரியுமா? அன்பு என்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?” என்று சுவாமிஜி கேட்டார்கள். மாணவர்கள், “ஆம், உணர்ந்து இருக்கிறோம்.” என்றனர். “அந்த அன்பு, கடவுள் இல்லாமல் வேறு என்ன?” என்று சுவாமிஜி பதிலுரைத்தார்.


இங்கு உள்ளவர்களில்... யார் கடவுள்?

No comments:

Post a Comment