ராமேஸ்வரத்தில் ஒரு தபோவனம் துவங்க வேண்டும் என்று சுவாமிஜி நினைத்தார். அதற்காக நிலம் வாங்குவதற்கென்று இருவர் ராமேஸ்வரம் சென்றனர்.
நிலம் தேவைப்பட்ட இடத்தில் நிலத்தின் விலை மிக பயங்கரமாக இருந்தது. சென்றவர்கள் திரும்பிவிட்டார்கள். சுவாமிஜி, "இன்னும் அதற்கான காலம் வரவில்லை போலும்; பொறுத்திருப்போம்" என்று கூறிவிட்டார்.
ஒரு சில நாட்கள் சென்றன. ராமேஸ்வரத்திலிருந்து ஓர் அன்பர் சுவாமிஜியை பார்க்க வந்தார். வந்தவர் சுவாமிஜியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். அவருக்குச் சொந்தமான ஒரு பெரிய சத்திரத்தை சுவாமிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
'ராயர் சத்திரம்' என்று ராமேஸ்வரத்தில் புகழ் பெற்ற சத்திரம் சுவாமிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆன்மீகப் பணிகளும் அங்கு தொடங்கப்பெற்றன. சில லட்சம் செலவழித்து புதுப்பிக்கப்பட்ட அச்சத்திரம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அப்பணியும் அங்கு விடாமல் நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment