Sunday, July 24, 2011

*திருப்பராய்த்துறை ஆசிரியர் கல்லூரி


திருப்பராய்த்துறை ஆசிரியர் கல்லூரிக்கு மூவர் குழுவினரின் பாராட்டு.

திருப்பராய்த்துறை விவேகானந்த ஆசிரியக் கல்லூரியினரைப் சோதித்துப் பார்ப்பதற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தவரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று 20ஆம் நாள் பிப்ரவரித் திங்கள் 1956 ல் நமது ஸ்தாபனத்திற்கு வந்து சேர்ந்தது. குழுவினர் மூவர் ஆவர்.

1.  காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.என். தம்பி,
2.  சென்னை கெல்லேட் உயர்நிலைப்பள்ளித் தலைவர் ரெவரண்டு டி. தம்பு ஸ்வாமி,
3.  சென்னை லேடி முத்தையா செட்டியார் உயர்நிலைப்பள்ளித் தலைவி ஸ்ரீமதி கோவிந்தராஜன்.

குழுவினருக்கு வித்யாவன உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரவேற்பு ஒன்று அளித்தனர். வித்யாவனத்தின் இயற்கை எழில் நிறைந்த சூழ்நிலையையும் அமைதி நிறைந்த சுற்றுப்புறத்தையும் பார்த்துக் களித்தனர். புதிதாக ஏற்பட்ட ஆசிரியர் கல்லூரி ஒன்று சீரிய முறையில் நடைபெற்று வருவதையும் அவர்கள் பாராட்டினார்கள். உயர்நிலைப்பள்ளி ஒன்று நல்ல முறையில் அமைந்திருப்பது அந்த ஆசிரியர் கல்லூரிக்கு நல்ல படிப்பினையைப் புகட்டும் என்றும் அவர்கள் பகர்ந்தார்கள். “நல்ல பண்புகள் அனைத்தும் அமையப்பெற்ற உயர்நிலைப்பள்ளி ஒன்றைப் பற்றி நான் நெடுநாளாக மனத்தில் பல கருத்துக்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்துக்கள் யாவும் இங்கு புறத்தில் இந்தப் பள்ளிக்கூடத்தில் உருவெடுத்துத் திகழ்வதைக் கண்டு உள்ளம் பூரிக்கிறேன்!” என்று டாக்டர் ஏ.என். தம்பி அவர்கள் உற்சாகம் ததும்பப் பகர்ந்தார்கள்.

1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்லூரி அவ்வாண்டே மூடப்பட்டது. இதனைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 16.07.2011, சனிக்கிழமை அன்று இடப்பட்ட “கொள்கையில் உறுதி” என்ற கட்டுரையை வாசியுங்கள்...

No comments:

Post a Comment