Thursday, October 27, 2011

*திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பாடப்பெற்ற பாடல்கள் - 1

திருவாசகம்

செத்திலாப்பத்து
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார்
    
   அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம்
என்பர் ஆய் நினைவார் எனைப்பலர்
    
   நிற்க இங்கு எனை எற்றினுக்கு ஆண்டாய்
வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை
    
   மரம் கண் என் செவி இரும்பினும் வலிது
தென் பராய்த்துறையாய் சிவலோகா
     
  திருப்பெருந்துறை மேவிய சிவனே. (4)

  •   மெழுகு அம் என்பர் ஆய் – மெழுகு போன்று உருகிய எலும்பை உடையவராகி. 
  •   எனைப்பலர் – வேறு பலரும்.
  •  எற்றினுக்கு – எதற்காக.
  •  வன் பராய் முருடு – கடினமான பராய்மரத்தின் கணு.
  •  மரம்கண் – மரத்தில் செய்ததும் பார்க்க உதவாததுமான கண்.
கருத்து:
பெம்மானே, உன்னிடத்து பக்தி படைத்துள்ள பிரம்மதேவன், விஷ்ணு, வேறு பலர் அருளை நாடி உருகியிருக்க வைத்துவிட்டு என்னை எதற்காக ஆட்கொண்டாய்? என் மனது பராய்க்கட்டை போன்று வலியது. மரத்தில் செய்தது போன்ற என் கண் உன்னைப் பார்க்கத் தகுதியற்றது. காதோ இரும்பினும் கடினமானது.

 திருப்பராய்த்துறை திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணி

அன்பர்களே,
       1940 – ஆம் ஆண்டு மே மாதம் 26 – ஆம் தேதி திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாகிக் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். 12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.

     தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
 அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.

கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்

SRI RAMAKRISHNA TAPOVANAM, 
THIRUPPARAITHURAI 

என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque  எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.

Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.

Saturday, October 22, 2011

*இரங்கல் செய்தி

திருப்பராய்த்துறை ஸ்ரீ விவேகானந்த வித்யாவன பள்ளியின் சமூகஅறிவியல் ஆசிரியர் திரு.ராஜு அவர்களின் துணைவியார் நேற்று(21.10.2011) இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, October 19, 2011

*திருப்பராய்த்துறை திருக்கோயில் கல்வெட்டுக்கள்

மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மரான முதற்பராந்தகன் காலத்திய கல்வெட்டுக்கள் மிகுதியாக உள்ளன. இன்னாரது என்று அறிய முடியாத இராஜகேசரிவர்மன் காலத்திய கல்வெட்டுக்களும் சில உள்ளன. அவையன்றிச் சுந்தரபாண்டியத்தேவர், கோநேரின்மை கொண்டான். கிருஷ்ணதேவ மகாராயர் கல்வெட்டுக்களும் இன்னாரென்று அறியமுடியாத சில கல்வெட்டுக்களும் உள்ளன. எல்லாமாக அரசியலார் படியெடுத்த கல்வெட்டுக்கள் 83. அவற்றால் அறியப்படும் கோயிலைப்பற்றிய உண்மைகள், கோயிலுக்கு விளக்கு எரிக்க, ஆடும், பொன்னும், நிலமும் அளித்த செய்திகளாகும்.

சுந்தரபாண்டியத் தேவன் தன்னுடைய ஆட்சி ஒன்பதாம் ஆண்டில் தங்க ஆபரணங்கள் அளித்தான்(267 of 1903). குலோத்துங்கன் கருப்பக் கிருகத்துக்குப் பொன்வேய்ந்தான்(268 of 1903). சோமாஸ்கந்தர் கோயில் முன் மண்டபம், சிறைமீட்டான் திரிவிக்ரம உதயனால் கட்டப்பெற்றது(280 of 1903). தலவிநாயகருக்கு ஏகாம்பர உதயன் ஆட்சியில் நிலம் வழங்கப் பெற்றது(282 of 1903). இறைவன் திருப்பராய்த்துறை மகாதேவர், பராய்த்துறை பரமேசுவரன்(570 of 1903, 566 of 1903). என்று வழங்கப்பெறுகிறார். இத்தலம் உத்தமசீலிச் சதுர்வேதி மங்கலத்துத் திருப்பராய்த்துறை என்று குறிக்கப்படுகிறது. இங்கே தக்ஷிணாயன புண்ணிய காலத்திலும் சங்கராந்தியிலும் நீராட்டு விழா நடைபெற்றதாகத் தெரிகின்றது.
(மேலுள்ள படங்கள் சிற்பங்களாகும். கல்வெட்டு சம்பந்தமாக படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.)

திருப்பராய்த்துறை திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணி

அன்பர்களே,
       1940 – ஆம் ஆண்டு மே மாதம் 26 – ஆம் தேதி திருப்பராய்த்துறை ஸ்ரீ தாருகாவனேஸ்வரர் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகள் பூர்த்தியாகிக் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின் 1998 ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் நாம் அனைவரும் கூடி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றோம். 12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமாக 31.08.2011 அன்று பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கியுள்ளன.

     தபோவன பழைய மாணவர்களும், அன்பர்களும் கும்பாபிஷேக திருப்பணிக்காக நன்கொடையளிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
 அன்புடன்,
சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கங்கள்.

 கும்பாபிஷேகத் திருப்பணிக்கு நன்கொடைகள்

SRI RAMAKRISHNA TAPOVANAM, 
THIRUPPARAITHURAI 

என்ற பெயருக்கு திருச்சியில் மாற்றதக்கவகையில் DD அல்லது Cheque  எடுத்து கீழ்கண்ட ஈரோடு முகவரிக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் வழங்கும் நன்கொடைக்கு 80G வரிவிலக்கு உண்டு.

Dr. R. குமாரசுவாமி,
பேபி மருத்துவமனை,
171, நேதாஜி ரோடு,
ஈரோடு – 638 001.
#98427 26272.

Monday, October 17, 2011

*துலாஸ்நானம்

ண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் தேதி திருப்பராய்த்துறை தலத்தில் காவிரிக்கரையில் ‘முதல்முழுக்கு’ என்னும் துலாஸ்நானம் ஆரம்பிக்கிறது.

அந்த மாதம் முழுவதுமோ அல்லது அந்த மாதத்தில் இயன்ற நாட்களிலோ காவிரியில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. (குறிப்பு:- வரும் செவ்வாய்க்கிழமை 18.10.2011 அன்று, ஐப்பசி மாதம் முதல் நாள் திருப்பராய்த்துறை துலாஸ்நான நாளாகும்.)

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
 
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் படத்தைத் தம் திருக்கைகளில் ஏந்திக்கொண்டு, தம் குருகுலப் பிள்ளைகளுடன் காவிரிக்குச் சென்று துலா ஸ்நானம் செய்ய வைத்து அகமிகமகிழ்ந்து வந்தார். அன்று ஒரு நாள் மட்டும் குருகுலப்பிள்ளைகள் தாங்களே தனித்துச் சென்று, தாருகாவனேஸ்வரப் பெருமானைக் கண் குளிர வணங்கி மகிழ்ச்சி அடைவர். நம் பெரிய சுவாமிஜியின் காலத்துக்குப் பின்னும் இந்த நடைமுறை இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.

துலா ஸ்நான தினத்தன்று பராய்த்துறைநாதரும், பசும்பொன்மயிலாம்பிகையும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தமாடுவர். அவ்வமயம் பக்கத்து ஊர் மக்கள் மற்றும் பக்த பெருமக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வர். அக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.