Sunday, July 31, 2011

*சுவாமிஜியின் இடித்துரை


திரு. K. ராமசாமி,
விடுதி எண் – 123(1955-56),
முன்னாள்மாணவர்.
                            
ஒருமுறை சித்பவானந்த சுவாமிஜியுடன் நாங்கள் கோவை சென்றிருந்த சமயம் G.D. நாயுடு அவர்கள், “குழந்தைகளுடன் சுவாமிகளும் வந்து என் விஞ்ஞானக் கூடத்தை பார்க்க வேண்டும்” என்று அழைத்தார்.சுவாமிகளும் எங்களை அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் பல அதிசயங்களைப் பார்த்தோம். எல்லாம் முடிந்த பிறகு G.D. நாயுடு அவர்கள் எல்லோரிடமும் ஒரு பேப்பர் பென்சில் கொடுத்தார். சுவாமிக்கும் தான். இந்த விஞ்ஞான அதிசயங்களைப் பற்றி எங்கள் கருத்துக்களை எழுதித் தரச் சொன்னார். நாங்கள் அனைவரும் ஆஹா! ஓஹோ! என்று புகழ்ந்து எழுதிக்கொடுத்தோம். நம் சுவாமி எழுதியிருந்ததை படித்த நாயுடு அவர்கள் தலை குனிந்தார். அப்படி என்ன சுவாமி எழுதியிருந்தார்? 

“தாங்கள் ஒரு சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும் இருப்பதைப் பற்றி மகிழ்ச்சி. ஆனால் உங்களைப் போன்றவர்கள் தனக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு அந்த அறிவு சார்ந்த உண்மைகளை தெரிவிக்காமல் சமுதாயத்துக்கு உதவாத கடை மானுடர்களாய் மடிந்து விடுகின்றனர். அந்த வகையில் தாங்களும் ஒருவர்”. என்று சுவாமி எழுதியிருந்தார். சுவாமிஜியின் இடித்துரை எப்படி? இன்றளவும் இந்தியாவுக்கு நாயுடுவால் எப்பலனும் இல்லை. இதை சுவாமிகள் அன்றே பகர்ந்தார்கள்.

Saturday, July 30, 2011

*இரங்கல் செய்தி

சிதம்பரம் வக்கீல் K. பாலசுப்ரமணியம்(436) அவர்களின் இளைய சகோதரர் திரு. K. கணேசன்(தபோவன பழைய மாணவர்) அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

*Salem Sri Sarada College Golden Jubliee Souvenir (1961-2011)