Friday, July 1, 2011

*கண்டிப்பானவர்... ஆனால் கருணை உள்ளவர்.

சுவாமி சித்பவானந்தர் மிகவும் கண்டிப்பானவர், ஆனால் கருணை உள்ளம் மிக்கவர்.

திருவேடகம் கல்லூரியின் கட்டிடப்பணிகள் நடந்துகொண்டிருந்தன. பெரிய சுவாமிஜி அவ்வப்போது வந்து பணிகளை பார்வையிட்டுச் செல்வார்.

திருவேடகம் ரயில் நிலையத்தில் இறங்கி குறுக்கே வயல் வரப்பு வழியாக கட்டிட வேலைகள் நடக்கும் இடத்திற்கு வருவார். வரும்போதே வேலைகள் நடந்து வருவதை கவனித்துக்கொண்டு தேவையான உத்தரவுகளையும் இட்டு வருவார்கள். பின்புதான் அலுவலகத்திற்குச் சென்று அமருவார். ஒரு சமயம் அவர் அப்படி வரும்போது சுவாமி முக்தானந்தா என்பவர் கட்டிட வேலைகள் நடப்பதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

அவரைக் கண்டதும் பெரிய சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. காரணம், கையில் குடையில்லாமல் முக்தானந்த சுவாமிஜி வெயிலில் நின்றுகொண்டிருந்ததுதான்!

பெரிய சுவாமிஜி அவரை அழைத்து கோபத்துடன், "குடையுடன் வேலையை செய்வதாயிருந்தால் நில். இல்லாவிட்டால் நீ வேலையை கவனிக்க வேண்டாம்" என்று கூறிவிட்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.

பெரிய சுவாமிஜியின் கண்டிப்பையும், கோபத்தையும் கண்டு கலங்கிய மனத்துடன் அலுவலக அறைக்குள் நுழைந்த முக்தானந்தா சுவாமிகளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அவரது உபயோகத்திற்காக புதிய குடை ஒன்று பெரிய சுவாமிஜியின் அருகில் அவரை வரவேற்றது!!!

No comments:

Post a Comment