Saturday, December 10, 2011

* "நான் இருக்கிறேன்!"

நம் பள்ளியின் இராமகிருஷ்ண ஜயந்தி விழாவிற்கு ஒத்திகை நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. கோபுரம் (Pyramid) நிகழ்ச்சியில் நான் பங்கு பெற்றிருந்தேன். அந்நிகழ்ச்சியில் ஒரு பகுதியில் முதலில் 7 பேரும், அவர்கள் மேல் 5 பேரும், அவர்கள் மேல் 3 இருந்ததால் ஒருவனாக உச்சியில் நிற்குமாறு உடற்கல்வி ஆசிரியர் கூறியிருந்தார். அந்த சமயம் சித்பவானந்த சுவாமிஜி அங்கு வந்திருந்தார். எங்களைச் செய்யுமாறு கூறி ஒத்திகை பார்த்தார்கள். அந்நிகழ்ச்சியின்போது எனக்குக் கீழ் நின்றிருந்தவர் ஆடியதால் அனைவரும் ஒருவரின்மேல் ஒருவராகக் கீழே விழுந்தோம். என்னை உடற்பயிற்சி ஆசிரியர் லாவகமாகப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்துவிட்ட சுவாமி என்னருகில் வந்து “உனக்கு ஒன்றும் ஆகாது; நான் இருக்கிறேன், மீண்டும் தைரியமாகச் செய்” என்று கூறினார்கள். எனக்கு அக்கணம் மெய் சிலிர்த்துவிட்டது. மேலும் அப்போதே சுவாமிகளின் முன்னிலையில் அழகாகக் செய்து காட்டிக் கைத்தட்டல்களைப் பெற்றோம். எனக்கு ஏற்பட்ட மன உறுதிக்குக் காரணமாய் அமைந்த சுவாமியின் அற்புதங்களைக் கண்டு இன்னும் வியக்கிறேன்.
-திரு. நா. சண்முகம்,
விடுதி எண்: 360 (1987 – 88)

No comments:

Post a Comment