Monday, December 26, 2011

*ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்


ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் பற்றி  
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய நூல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள்:

ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள்

செய்தி – 1:
திருவாசகம்

திருப்படை ஆட்சி – 4வது பாடலுக்கான விளக்கம்

காசியில் த்ரைலிங்க ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட அவதூதர் ஒருவர் இருந்தார். ஹடயோகம் பண்ணி அவர் சுமார் நானூறு வருஷம் வாழ்ந்திருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காசிக்கு யாத்திரை போயிருந்தபோதும் அவர் திருமேனி தாங்கியிருந்தார். அவர் படைத்திருந்த அதீத நிலையை முன்னிட்டுக் காசிக்கே புதிய மகத்துவம் வாய்ப்பதாயிற்று என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவரைப் போற்றினார். அத்தகைய த்ரைலிங்க ஸ்வாமிகளின் செயல்கள் சில ஈண்டு குறிப்பிடத்தக்கவை. பார்க்குமிடமெல்லாம் சிவலிங்க மயமாயிருப்பது காசியின் மஹிமையாகும். த்ரைலிங்க ஸ்வாமிகள் ஆங்கு வெவ்வேறு இடங்களில் தென்படுவார். ஓர் இடத்தில் ஒரு சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்துகொண்டிருப்பார். மற்றோரிடத்தில் சிவலிங்கம் ஒன்று அவருக்குத் தலையணையாக பயன்படும். வேறு ஓர் இடத்தில் இருக்கும் சிவலிங்கம் அவருக்குக் கால் அணையாக உதவும். அப்படிச் சிவ அபராதம் செய்வதை பக்தர் உலகம் ஆமோதியாது. ஆஷாடபூதி ஒருவன் அப்படிச் செய்தால் மக்கள் அவனைத் தயங்காது புடைப்பார்கள். ஆனால் த்ரைலிங்க ஸ்வாமிகளை நடமாடும் விசுவநாதனாகக் காசி வாசிகள் கருதினார்கள். அவர், திருநீறு பூசுதல் சிவலிங்கத்தை வணங்குதல் போன்ற சமய அனுஷ்டானங்களையெல்லாம் கடந்து அதீதத்துக்குப் போனவர் ஆவார்.

 Ramakrishna and His Disciples
by Chritopher Isherwood – Page number 133

He(Sri Ramakrishna Paramahamsar) went to see the famous holy man, Trailanga Swami, and found him indeed holy. ‘I saw’, said Ramakrishna, ‘that the Universal Lord Himself was using  the Swami’s body to manifest His presence. All Benares was illumined by his stay there. He was in an exalted state of knowledge. He had no body-consciousness. The sand there gets so hot in the sun that no one can walk on it; but he lay on it comfortably. I cooked rice pudding and brought it with me and fed him with it. At that time, he couldn’t speak to me because he had taken a vow of silence. So I asked him by signs whether Ishwara was one or many. He replied by signs that Ishwara(ஈஸ்வரன்) is known to be one when a man enters the state of Samadhi; but as long as any consciousness of “I” and “You” persists, Ishwara is perceived as many. I (Sri Ramakrishna Paramahamsar) told Hriday, “In him you see the condition of a true Knower of Brahman.”
 
செய்தி – 2:
ஸ்ரீ தாயுமான சுவாமி பாடல் 

எங்கும் நிறைகின்ற பொருள் – பாடல் எண் 8.

காயசித்தி பண்ணுவது சாத்தியம். காயசித்தி பண்ணிய த்ரைலிங்க ஸ்வாமிகள் காசியில் சுமார் 400 வருஷங்கள் வாழ்ந்திருந்தார். தாயுமானவர் பிறப்பெடுப்பதற்கு முன்பே அவர் காயசித்தி பெற்றிருந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்குப் பின்பும் அவர் வாழ்ந்திருந்தார். த்ரைலிங்க ஸ்வாமி படைத்திருந்த அத்தகைய பண்பட்ட சரீரமும் பிறகு மரணத்துக்கு ஆளாயிற்று.
இன்று டிசம்பர் 26 ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகள் ஜீவன் முக்தி அடைந்த நாள் ஆகும். ஸ்ரீ த்ரைலிங்க ஸ்வாமிகளின் பாதகமலங்களுக்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment